Dr. Zakir Naik - Historic Debate at Oxford Union [UK] - Islam & 21st Century
இஸ்லாமிய மார்க்க அறிஞர் Dr சாகிர் நாயக் அவர்களின் சிறப்புரை பற்றிய அறிவித்தல்
அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும்
உலக இஸ்லாமிய ஆராய்ச்சி மையத்தின் தலைவரும் இஸ்லாமிய மார்க்க அறிஞருமான Dr சாகிர் நாயக் அவர்கள் இன்ஷா அல்லாஹ் 11.02.2011 இன்று வெள்ளிக்கிழமை நம் நாட்டு நேரப்படி நள்ளிரவு 12.00மணிக்கு லண்டன் மாநகரின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் முக்கிய சிறப்பு சொற்பொழிவொன்றை நிகழ்த்த ஒக்ஸ்போட் மன்றம் (Oxford Union) ஏற்பாடு செய்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இதில் உலகில் உள்ள மதத் தலைவர்கள், அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், அனைவரும் நேரில் கலந்து கொள்ளவுள்ள இம் மாபெரும் நிகழ்ச்சியை உலகில் அனைத்து நாடுகளிலும் செய்மதியூடாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒலிபரப்பச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.
இவ் வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்ச்சியை நமதூர் மக்களும் கண்டு பயன்பெறுவதற்காக ஹிஸ்புல்லாஹ் பவுண்டேசன் அனுசரணையில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேரடி ஒலிபரப்புச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிக்ழ்வுக்கு அனைவரையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஒளிபரப்புச் செய்ய்ப்படும் நிகழ்வு ஆங்கில மொழியில் இடம்பெறும்.
இவ்வண்ணம்
ஏற்பாட்டுக் குழு
ஹிஸ்புல்லாஹ் பவுண்டேசன்
காத்தான்குடி
குறிப்பு:- Dr சாகிர் நாயக் அவர்களின் சுகததாச நிகழ்ச்சி 10மணிக்கு ஒளிபரப்புச் செய்யப்படும்.
5 Proven Ways to Make Money With AI Skills
-
From AI artwork to chatbots that never sleep, the rise of generative AI has
flipped traditional career paths on their heads. We understand that this
rise...
3 months ago